வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2015 (22:15 IST)

வாங்க கேப்டன் கூட்டணிக்கு: மனம் திறந்த ராமதாஸ்

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்றால், அவர்களை எங்களது கூட்டணியில் வரவேற்க, நாங்கள் தயாராக உள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பாமக சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
 
அப்போது அவர் மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு, அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார்.
 
பாமக சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். இதை ஏற்று தேமுதிக கூட எங்களோடு கூட்டணிக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம்.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கிறார். அவர் கடந்த 156 நாட்களில் ஒரு முறைதான் அமைச்சரவை கூட்டத்தை  கூட்டி உள்ளார். முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
 
தனது கூட்டணிக்கு தேமுதிகவை பாமக நிறுவனர் ராமதாஸ் அழைத்துள்ளது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.