தமிழில் டுவிட் செய்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

modi
siva| Last Updated: புதன், 14 ஏப்ரல் 2021 (07:29 IST)
இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதலே தமிழர்கள் பலர் கோவில்களுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழக சகோதர சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் இந்த தற்போது வைரலாகி வருகிறதுஇதில் மேலும் படிக்கவும் :