வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 7 நவம்பர் 2015 (01:25 IST)

பாட்டாசு வெடிப்பதைவிட ஏழை குழந்தைகளுக்கு உதவுங்கள்: தாரேஸ் அகமது வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையின் போது, அதிக அளவில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து, அதன் மூலம் ஏழை குழந்தைகளின் படிப்பதற்கு உதவுங்கள் என பெரும்பலூர் மாவட்ட கலெக்டர் தாரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:–
 
தீபாவளி பண்டிகையை அனநைாவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கந்தக–டை–ஆக்ஸைடு மற்றும் மிதக்கும் நுண்துகள்கள் ஆகியவை காற்றில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.
 
மேலும், மனிதர்களுக்கு, கண் எரிச்சல், ஒவ்வாமை, சுவாசக்கோளாறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.
 
அத்துடன், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.
 
மக்கள் அதிகம் கூடும் இடம், போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள்,  மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள், நீதிமன்றங்கள் போன்ற பகுதிகளில் வெடிகளை தயவு செய்து யாரும் வெடிக்க வேண்டாம்.
 
மேலும், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள இடங்களில் ராக்கெட் மற்றும் பட்டாசு வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பட்டாசுகள் அதிக அளவில் வெடிப்பதை குறைத்து, அதன் மூலம் ஏழை குழந்தைகளின் படிப்பதற்கு உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.