வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: சனி, 9 ஆகஸ்ட் 2014 (13:12 IST)

தமிழ்நாட்டில் புதிதாக 1,600 கி.மீ. நீளத்துக்கு பிளாஸ்டிக் தார்ச் சாலைகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் 2014 ஆகஸ்டு 8ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
பிளாஸ்டிக் தார்ச் சாலைகள்
 
கிராமப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலைகளை அமைக்க உத்தரவிடப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் 5,710 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் 717 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், இந்த ஆண்டு 175 கோடி ரூபாய் மதிப்பில் 1,600 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்கப்படும். 
 
பழுதடைந்த சாலைகள் மேம்பாடு
 
ஊரகப் பகுதிகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் நேரடி பங்கு வகிப்பதால், கிராமப் பகுதிகளிலுள்ள பழுதடைந்த 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள, பேருந்து செல்லும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வலுப்படுத்தப்பட்டு, மேம்பாடு செய்யப்படும். 
 
மேலும், இச்சாலைகளை நீண்டகாலம் பயன்படுத்திடும் வகையில், தேவையான வடிகால் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும்.
 
இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.