வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (19:39 IST)

பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


 
 
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்நிறுவனங்கள் மாதத்திற்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கிறது. அதன்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தொடக்கத்திலும் மாதத்தின் 15 ஆம் தேதியும் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 25 காசுகளும் குறைக்கப்பட்டு நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.