பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:18 IST)
சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
 
மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்திருக்கும் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.
 
எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் தொழில் வளர்ச்சி விலைவாசியை கட்டுப்படுத்துதல். ஏழை எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை இவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :