1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petition Filed in Supreme Court Seeking Cancellation of Tamil Nadu Assembly Elections

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

supreme
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் மிக மோசமாக மீறப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். 
அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கி, வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயல்பாடுகள் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது என்றும், இது நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை தடுக்கும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
 
எனவே, இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
 
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கப்போகும் உத்தரவுக்கு பின்னர் தான் தேர்தல் நடைபெறுமா? அல்லது தள்ளி போகுமா? என்பது தெரிய வரும்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தரமான சம்பவம் செய்த அண்ணாமலை..!