இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயங்கிய சென்னை ஏர்போர்ட் – பயணிகளுக்கு சோதனை!

Last Updated: திங்கள், 25 மே 2020 (12:05 IST)

இந்தியாவில் இன்று முதல் உள்நாட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரவிரும்பிய பயணிகள் சென்னை வந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த வாரமே நடைபெற்ற நிலையில் இன்று முதல் விமானங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் மூலம் பயணிகள் விமான நிலையத்தை அடைந்துள்ளனர். அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள முத்திரையும் இடப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :