வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2016 (03:54 IST)

நிதிநிலை அறிக்கை என்ற தேர்வில் பாஸ்... ஆனால்....- சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

நிதிநிலை அறிக்கை என்ற தேர்வில் பாஸ்... ஆனால்....- சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி அரசு நிதிநிலை அறிக்கை என்ற தேர்வில் பாஸ் செய்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஏழை மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வளர்ச்சிக்காகவும் மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகளை எதிர்பார்ப்பது வழக்கம்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏழை மக்களுக்கும் விவசாயப் பெருமக்களுக்குமான அறிவிப்புகள் நிறைந்துள்ளன.

ஏழை மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வளர்ச்சிக்காகவும் மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகளை எதிர்பார்ப்பது வழக்கம். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏழை மக்களுக்கும் விவசாயப் பெருமக்களுக்குமான அறிவிப்புகள் நிறைந்துள்ளன.ஏழை மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வளர்ச்சிக்காகவும் மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகளை எதிர்பார்ப்பது வழக்கம். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல்
செய்துள்ள 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏழை மக்களுக்கும் விவசாயப் பெருமக்களுக்குமான அறிவிப்புகள் நிறைந்துள்ளன.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் 47ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது சராசரி மாத வருமானம் 6 ஆயிரத்து 400 ரூபாய் மட்டுமே உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வேளாண்துறையில் 4 சதவீதம் வளர்ச்சியயையாவது பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ள நிலையில் நிதி நிலை அறிக்கையை அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ளார்.

சிறுதொழில் நிறுவனங்களுகக்ன உற்பத்தி வரி விலக்கு வரம்பை ஒன்றரை கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை, தவணை தவறிய வாராக் கடனை செலுத்த 6 மாத அவகாச நீட்டிப்பு, தொழில் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைப்பு, சிமெண்ட் உற்பத்தி வரிக் குறைப்பு, ஏற்றுமதியாளர்களுக்கான தனி அமைச்சகம், தனி கடன் கொள்கை எனத் தொழில்-வணித் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. இந்த நிலையில், அருண்ஜெட்லி நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது கவனத்திற்குரியது.

இந்த நிதிநிலை அறிக்கையில் பயிர் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு, பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு (2017) ரூ.5,500 கோடி ஒதுக்கீடு, விவசாயம் சார்ந்த 23 பெரிய திட்டங்கள், அம்பேத்கர் பிறந்தநாளில் கிராம பஞ்சாயத்துகளுக்களின் வளர்ச்சிக்காக 2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு , வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் எரிவாயு, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள முதியவர்களுக்கு 1 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, நாடு முழுவதும் 3000 மருந்துக் கடைகள், புதிய தொழில் தொடங்குவோருக்கு 3 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை, பணவீக்கக் கட்டுப்பாடு உள்ளிட்ட பலவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. புதிய வரிச் சலுகைகள் இடம்பெறவில்லை. தொழில்-வர்த்தகத் துறையினரின் கோரிக்கைகளில் சில கவனிக்கப்பட்டு, பல விடுபட்டுள்ளன. ஏழைகள் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போதுதான் அவற்றின் தன்மை தெரியவரும்.

திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதுபோல, பிரதமர் மோடி அரசு நிதிநிலை அறிக்கை என்ற தேர்வில் பாஸ் செய்திருக்கிறது. நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளதா என்பதை இதில் உள்ள அறிவிப்புகள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே தெரிய வரும் என தெரிவித்துள்ளார்.