விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் தேமுதிக இல்லை: சந்திரகுமார் பேட்டி


Caston| Last Modified புதன், 6 ஏப்ரல் 2016 (12:45 IST)
தேமுதிக கட்சி கேப்டன் விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் இல்லை என கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்ட சந்திரகுமார் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


 
 
தேமுதிக மக்கள் நல கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுகவில் சேர வேண்டும் எனவும் நேற்று போர்க்கொடி உயர்த்திய தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையிலான அணியை விஜயகாந்த் நேற்று நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்திரகுமார் தலைமையிலான அணி சந்தித்தது. செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், தேமுதிக கட்சி விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் இல்லை என தெரிவித்தார்.
 
மேலும் கட்சியானது பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என போட்டுடைத்தார். பிரேமலதாவால் கட்சி அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக கூட்டணிக்கு செல்லாமல், மக்கள் நல கூட்டணிக்கு தேமுதிக சென்றதற்கு பிரேமலதா தான் காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :