ஆகஸ்ட் 9ஆம் தேதி: மதுரையில் பாண்டிய மண்டல மாநாடு - ராமதாஸ் அறிவிப்பு

K.N.Vadivel| Last Updated: புதன், 3 ஜூன் 2015 (13:02 IST)
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுரையில் பாண்டிய மண்டல மாநாடு நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்அறிவித்துள்ளார்.
இது குறித்து, மதுரையில் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் விரைவில் வர உள்ள சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாமக மாநாடுகள் நடைபெறும்.
முன்பு, சேலத்தில் பாட்டாளி மக்கள் சார்பில் மாநாடு நடைபெற்றது. அதே போல, ஜெயங்கொண்டத்தில் மே 17ஆம் தேதி சோழ மண்டல மாநாடு நடைபெற்றது. மேலும், கோவையில் ஜூலை மாதம் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி மதுரையில் பாண்டிய மண்டல மாநாடு நடைபெறும்.

தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பது தான் பாமகவின் கனவு. லட்சியம். ஊழலற்ற, மது இல்லாத நல்லாட்சியை பாமகவால் மட்டுமே தரமுடியும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :