திஹார் ஜெயில் 75 ஆவது பிறந்தநாள் – குடும்பத்தார் மூலம் டிவிட்டரில் நன்றி தெரிவித்த ப சிதம்பரம் !

Last Modified செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (09:14 IST)
நேற்று தனது திஹார் ஜெயில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தனது குடும்பத்தார் மூலமாக தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரம் சிபிஐ காவல் முடிந்து தற்போது நீதிமன்றக் காவலில் இப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கே மற்ற சாதாரணக் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டு உணவுக் கூட மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அவரது 75 ஆவது பிறந்தநாள் தினத்தில் காங்கிரஸ் கட்சியினரும் தொண்டர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளையும் பாஜக அரசுக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து தனது குடும்பத்தார் மூலமாக தனது டிவிட்டர் கணக்கில் இருந்து அவர் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டில் ‘நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர், நலம் விரும்பிகள் எனக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துகளை குடும்பத்தினர் மூலம் கிடைக்கப்பெற்றேன். நான் 74 வயதானவன் தான். ஆனாலும் எனது இதயத்துக்கு இப்போது 74 வயதுகள் குறைந்திருப்பதாக உணர்கிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ எனவும் மற்றொரு டிவிட்டில் ‘எனது கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றித்தான். நாட்டின் பொருளாதாரம் பற்றிய புள்ளி விவரங்கள் கவலை தருகின்றன. கடவுள் இந்த நாட்டை ஆசீர்வதிக்கட்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :