1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. P. Chidambaram Praises Chief Minister Vijay for His Fluency in English

முதல்வர் விஜய் ஆங்கில உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்: ப சிதம்பரம்

ப.சிதம்பரம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுவதையும், சொற்களை சரியாக உச்சரிப்பதையும் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இரு மொழி கொள்கையை வலியுறுத்தும் முதல்வர் விஜய்யின் ஆங்கில பேச்சை முதன்முறையாக கேட்டதாக அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இருமொழி கொள்கையை ஆதரிப்பவர்கள் மற்றும் குறிப்பாக இளம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாக பேசவும் உச்சரிக்கவும் வேண்டும் என்பதே தனது விருப்பம் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 
 
மேலும், அனைத்து பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், இரு மொழிக் கொள்கையானது ஏட்டளவில் மட்டும் இருக்காமல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மெட்ரோவில் 48 வயது நபரை தள்ளிவிட்டதில் மரணம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மகனும் கைது..