செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2016 (00:35 IST)

அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு?

அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 
 
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது துறை பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடமே ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் 75 நாட்கள் மருத்துவ போராட்டத்திற்கு பின்னர். சிகிச்சை பலனளிக்காமல் இதயம் செயலிழந்து முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது.
 
இதனையடுத்து முதல்வரின் துறைகளை கவனித்து வந்தவரும் இதற்கு முன்னர் இரண்டு முறை முதல்வர் ஜெயலலிதாவால் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டவருமான ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இன்று கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை அடுத்த முதல்வராக, சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.