பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்: ரஜினிக்கு ஓபிஎஸ் அட்வைஸ்

Last Modified செவ்வாய், 21 ஜனவரி 2020 (21:40 IST)
பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் அவரை விமர்சனம் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறலாம்
அந்த வகையில் தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்றும், என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் என்றும், பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும்
துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ரஜினிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
இதனையடுத்து அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்த ஒரே ஒரு சம்பவம் ரஜினிக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. ஆனா இந்து ஆதரவாளர்கள் ரஜினிக்கு ஆதரவாக கருத்து கூறி வருவதால் வரும் தேர்தலில் இந்து ஆதரவாளர்களுக்கு ஓட்டா? பெரியார் ஆதரவாளர்களுக்கு ஓட்டா? என இரு பிரிவாக பிரிக்கப்படும் போல் தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :