தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உறுதி.. பேச்சுவார்த்தை ஆரம்பமா?
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தவெக-வுடன் கைகோர்க்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் தரப்பில் 20 இடங்கள் வரை கோரப்பட்ட நிலையில், தவெக தலைமை 5 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் டிடிவி தினகரனுக்கும் கௌரவமான எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
இவர்கள் இருவரும் கூட்டணியில் இணைவது, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் தவெகவுக்கு பெரிய சமூக மற்றும் வாக்கு வங்கி பலத்தை சேர்க்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Edited by Siva