69% இட ஒதுக்கீட்டை காப்பாற்றுங்கள்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்

ops eps
69% இட ஒதுக்கீட்டை காப்பாற்றுங்கள்:
siva| Last Updated: வியாழன், 6 மே 2021 (18:36 IST)
69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்றுங்கள் என புதிதாக அமையவிருக்கும் திமுக அரசுக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

சமீபத்தில் மராத்தா சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை அடுத்து தமிழகத்திலும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படலாம் என்ற நிலையில் சமூக நீதியின் தொட்டிலாம் தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்ற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு என்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அளிக்கப்பட்ட தனி உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்துள்ளது

தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கும் இரு 69 சதவீத இட ஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும் அச்சமும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்றப்படும் அதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என ஓபிஎஸ் இபிஎஸ் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்இதில் மேலும் படிக்கவும் :