வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (05:47 IST)

டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரம் பேச அனுமதி மறுப்பு: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக சட்ட சபையில் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், இதனை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 

 
தமிழக சட்ட சபை கூடியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு திருச்செங்கோட்டியில் தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணு பிரியா விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 
ஆனால், டிஎஸ்பி விஷ்ணுப்பியா தற்கொலை குறித்து பேச சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனால், சட்ட மன்றத்தில் இருந்து திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கோரியை பரிசீலனை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
 
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டுக் கொண்டு இருந்தனர். இதனையடுத்து, அவர்களை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் 10 பேரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.