’பேனர்’ ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு!

sivalingam| Last Modified புதன், 18 செப்டம்பர் 2019 (08:08 IST)
சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சமீபத்தில் பள்ளிக்கரணை அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று விழுந்ததால் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து மரணம் அடைந்தார். இந்த மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மரணத்தை அடுத்து பேனர் கலாச்சாரத்தை கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று அரசியல்வாதிகளும் திரையுலகினர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்


இந்த நிலையில் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது போலீசார் ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்கு செய்தனர். அதாவது 279, 304ஏ மற்றும் 336ஆகிய பிரிவுகளில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன


அதாவது மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் என்ற 308வது பிரிவின் கீழும் ஜெயபால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஜெயகோபால் கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஜெயகோபால் உறவினர் மேகநாதன் பெயரையும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது


இந்த சம்பவத்தில் ஏற்கனவே லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதும், பேனர் அச்சடித்த அச்சகம் சீல் வைக்கபட்டு இழுத்து மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :