1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : புதன், 14 டிசம்பர் 2016 (14:57 IST)

ஜெயலலிதா குறித்த கவுதமியின் கேள்வியில் நியாயம் இருக்கிறது: எஸ்.வி.சேகர் விளக்கம்!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் உடனடியாக அடுத்த நாளே அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

 
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து, பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பல தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். அக்கடிதத்தில்... தமிழக அரசின் அன்பார்ந்த தலைவர் ஒருவரைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்? ஏன் அவரை தனிமைப்படுத்தவேண்டும்? யாரின் அதிகாரத்தின் பேரில் அவரை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் போடப்பட்டன? ஜெயலலிதாவின் உடல்நிலை சிக்கலாக இருந்தபோது, அவரது சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்த நபர்கள் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருடையது? இது போன்ற பல கேள்விகள் தமிழக மக்களிடம் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. அவர்களது எதிரொலியை அந்தக் கேள்விகளை நான் உங்கள் முன் வைக்கிறேன். என குறிப்பிட்டிருந்தார்.
 
இது குறித்து எஸ்,வி.சேகரிடம் கேட்டப்பட்ட கேள்விக்கு ''கவுதமி எழுப்பும் கேள்வி நியாயமானது. டப்பாவில் போட்டு மூடிவைக்க இது ஒன்றும் கடுகோ, உளுத்தம்பருப்போ இல்லையே... ஒரு மாநில முதல் அமைச்சர் சிகிச்சையில் இருக்கும்போது கவர்னர் உள்பட யாரையுமே நேரில் பார்க்க அனுமதிக்காதது ஏன்? தொற்றுநோய் பாதிப்பில் இருப்பவரை யாரும் பார்க்கக்கூடாது என்றார்கள். ஆனால், இப்போது நர்ஸ், ஆயா எல்லோரும் பார்த்ததாகச் சொல்கிறார்கள். சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதாவை சசிகலா பார்க்க முடியும் என்றால், கனிமொழியும் பார்க்கலாம்தானே? எனவே இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அப்போலோ நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும் என கூறியுள்ளார்.