ஆம்னி பேருந்து போக்குவரத்து நாளை முதல் நிறுத்தம் !

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (14:39 IST)
ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னர் தெரிவித்தது. 
 
ஆனால், தற்போது ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் எனவும் பயணிகள் மன்னித்து கொள்ள வேண்டும். இழப்பை சரி கட்ட முடியாததால் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :