தொடர்புடைய செய்திகள்
- வீட்டில் தனிமையில் இருந்த மாற்றுத்திறனாளி பெண்!. உள்ளே புகுந்த வாலிபர்!.. ஈரோட்டில் புகார்!...
- விஜய் பிறப்பதற்கு முன்பே கலைஞர் பல துறைகளில் சாதனை படைத்துவிட்டார்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
- ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம்!.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..
- பொங்கல் பண்டிகைக்கு பிறகு எங்களை பார்த்து ஒட்டுமொத்த நாடே வியக்கும்: செங்கோட்டையன்
- கோவை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு.. வெளியேற்றப்பட்ட தவெக தொண்டர்கள்..!
கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை.. ஜல்லி, மணல் என்ன விலை? சங்கம் அளித்துள்ள விளக்க அறிக்கை...!
தமிழ்நாட்டில் ஜல்லி , எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் போன்ற கனிமவள பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் மற்றும் கட்டுமான துறையினர் நம்ப வேண்டாம் என்று சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள அதிகாரப்பூர்வ விலைப் பட்டியல் பின்வருமாறு:
ஜல்லி – ரூ. 4,000
எம்-சாண்ட் – ரூ. 5,000
பி-சாண்ட் – ரூ. 6,000
சங்கத்தின் தலைவர் கே. சின்னசாமி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், தங்களது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக அரசு நிர்ணயித்துள்ள இந்த விலையை விட குறைவான விலைக்கே கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கனிமவளப் பொருட்களின் விலை உயர்வு குறித்த உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்புவதை தவிர்த்து, சங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இச்சங்கம், வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முக்கிய விளக்கத்தை இன்று பொதுவெளியில் பகிர்ந்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
