செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.N.Vadivel
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2015 (00:48 IST)

சவூதி அரேபியாவில் செவிலியர் பணி

சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 

 
சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பிஎஸ்சி, எம்எஸ்சி தேர்ச்சியுடன், இரண்டு வருடம் அனுபவம் கொண்ட 32 வயதிற்குட்பட்ட செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
இதற்கான நேர்முகத் தேர்வுவரும் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டெல்லியிலும், 21 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐதராபாத்திலும், பெங்களூருவில் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
 
இரண்டு வருட பணி அனுபவமுள்ள பிஎஸ்சி  செவிலியர்களுக்கு ரூ.75,000 மற்றும் எம்எஸ்சி செவிலியர்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். மேலும், இலவச விமான டிக்கெட், தங்குமிடம், இலவச போக்குவரத்து வசதி, வருடத்திற்கு 30 முதல் 45 நாட்கள் விடுப்புடன் கூடிய பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
 
இது குறித்து மேலும் தகவல் அறிய, சென்னையில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், 044-22502267, 22505886 எண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.