1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Now We Know the Reason Behind Stalin's Speech" – CPI(M) Leader P. Shanmugam Slams DMK Over MLA Poaching Row

3 மாதத்தில் தவெக அரசு கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் சொன்னதுக்கு அர்த்தம் இப்போது புரிகிறது: பெ சண்முகம்

திமுக விமர்சனம்
தமிழகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, தாங்கள் மீண்டும் அரியணையில் அமர வேண்டும் என்ற நோக்கில் தான் திமுக இத்தகைய குறுக்குவழிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
மேலும், "சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும், மாற்றம் வரும் என்று பேசியதன் நிஜமான பின்னணி என்னவென்று இப்போதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது" என்று சண்முகம் சாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து கட்சி மாறுவது தமிழ்நாட்டில் சகஜமான ஒன்றுதான் என்றாலும், கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து ஒரு மக்கள் பிரதிநிதியை விலை பேசும் இந்த அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
3 மாநிலத்திற்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழ்நாட்டுக்கு மட்டும் அறிவிப்பு இல்லை.. ஏன்?