தூய்மை பணியாளர்கள் இனி விசில் ஊதக்கூடாது.. தி.மு.க. கவுன்சிலர் உத்தரவு.. அந்த பயம் இருக்கணும்..
சிவகங்கை நகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் இனி விசில்களை பயன்படுத்தக் கூடாது என திமுக கவுன்சிலர் பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
வழக்கமாக தூய்மைப் பணியாளர்கள் தெருக்களுக்குள் வரும்போது, மக்கள் குப்பைகளை கொண்டு வர ஏதுவாக விசில்களை ஊதுவது வழக்கம். ஆனால், இந்த விசில் சத்தம் பொதுமக்களுக்கும், குறிப்பாக நோயாளிகளுக்கும் இடையூறாக இருப்பதாகக் கூறி, 17-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயகாந்தன் இந்த தடையை விதித்துள்ளார்.
விசிலுக்குப் பதிலாக, சிறிய மைக்குகள் மூலம் மென்மையான குரலில் அறிவிப்புகளை செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். "விசில் சத்தம் காதை பிளப்பதாக புகார்கள் வருகின்றன, எனவே, இனி மைக் மூலம் அறிவிப்பு செய்யுங்கள்" என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆனால் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கப்பட்டதால் திமுக பயத்தின் காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பொதுமக்கள் பேசி கொள்கின்றனர்.
Edited by Siva