வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (15:19 IST)

அரசியலில் தந்தை மகனுக்கெல்லாம் இடமில்லை: முதல்வர் ஜெயலலிதா

அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை இன்று தலைமை தாங்கி நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை விமர்சித்தார்.


 
 
திருமணவிழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, அரசியலில் தந்தை மகனுக்கெல்லாம் இடமில்லை என கூறினார். ஒரு சிறு கதை மூலம் அவர் இந்த கருத்தை கூறினார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் ஆகியோரை தான் ஜெயலலிதா பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக கூறினார்.
 
திமுக-வில் உள்ள குடும்ப அரசியலை தான் ஜெயலலிதா, தந்தை மகனுக்கெல்லாம் அரசியலில் இடமில்லை என கூறியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என வேண்டுகோல் விடுத்தார்.
 
தமிழ்நாட்டின் நலன் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறையில்லாத எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. அதிமுகவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் அதிமுக மீது வசைபாடுவதையே ஒரே நோக்கமாக வைத்துள்ளதாக ஜெயலலிதா கூறினார்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு, அரசியலே பாடம் கற்றுகொடுக்கும். அடுத்தவர் மகிழ்ச்சியில் தங்கள் மகிழ்ச்சி என வாழ்வதே இல்லறம் என முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தினார்.