புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (08:28 IST)

முதல்வர் ஸ்டாலின் பிரிவினவாத மனநிலை கொண்டவர்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..!

முதல்வர் ஸ்டாலின் பிரிவினவாத மனநிலை கொண்டவர்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அண்மைக்கால உரைகள் பிரிவினைவாத மனநிலையை பிரதிபலிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே போர் நடப்பதாக முதலமைச்சர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு மாநிலத்தின் முதல்வர் இத்தகைய பிரிவினைவாத எண்ணங்களை தூண்டுவது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார். இது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என்றும் அவர் சாடினார்.
 
மேலும், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதாக முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டையும் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள அதிவேக இரயில் திட்டங்கள், சிறப்பு வேளாண்மை திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தமிழ்நாட்டிற்கு பயனளிக்காதா? என அவர் கேள்வி எழுப்பினார். 
 
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அரசியல் காரணங்களுக்காக இது போன்ற பொய் பிரச்சாரங்களை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 
 
 
Edited by Siva