இனி பர்வதமலைக்கு உங்க இஷ்டத்துக்கு ஏற முடியாது: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பர்வதமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இயற்கை வளத்தையும் பக்தர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க, ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி மலையேறுவோரின் எண்ணிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 200 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 800 பேர் இணைய வழியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என மாவட்ட நிர்வாகம் நம்புகிறது.
Edited by Siva