ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2025 (20:17 IST)

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் 23 செ.மீ. மழை பொழிவுடன்  சிறப்பாகத் தொடங்கியது. இருப்பினும், நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில், சராசரி 18 செ.மீ. என்ற அளவில் இருந்து வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
 
இந்த மழைப்பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 21-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
 
இந்த தாழ்வுப்பகுதி அடுத்த நாளே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva