1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2016 (09:57 IST)

சந்திரகுமார் தலைமையில் புதிய தேமுதிக?: இன்று முடிவு தெரியும்

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்திற்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளனர். அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விஜயகாந்த் உத்தரவிட்டார்.


 
 
நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினரும், கொள்கை பரப்பு செயலாளருமான வி.சி.சந்திரகுமார் தலைமையில் பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அவர்கள் தேமுதிக, திமுக உடன் கூட்டணி சேர வேண்டும் என இன்று மதியம் வரை விஜயகாந்திற்கு கெடு விதித்தனர். ஆனால் விஜயகாந்த் நேற்று மாலை 5.30 மணியளவில் அவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
 
இந்நிலையில் நீக்கப்பட்ட அனைவரும் போட்டி தேமுதிகவாக செயல்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கட்சியில் இருந்து வெளியே வருபவர்களையும். அதிருப்தியில் உள்ள அனைவரையும் ஒன்று திரட்டி சந்திரகுமார் தலைமையில் போட்டி தேமுதிகவை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
இது தொடர்பான அறிவிப்பு அதிருப்தியில் உள்ள சந்திரகுமார் உள்ளிட்ட கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதன் பின்னணியில் திமுக செயல்படுவதாகவும் பரவலாக பேசப்படுகிறது.