வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மே 2021 (12:55 IST)

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! – 4 மாநிலங்களில் மழை வாய்ப்பு!

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் 4 மாநிலங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் இது புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழையும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.