வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (15:30 IST)

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி… பட்டியல் கேட்கும் ஆணையர்!

கூட்டுறவு வங்கிகளில் மக்கள் வாங்கியுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்ப்ட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து இப்போது அதற்கான பட்டியல் கேட்டு ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதையடுத்து 6 சவரன் வரையிலான நகைக்கடன்களும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இது சம்மந்தமான பட்டியலைக் கேட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ‘ தலைமை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் உரிய படிவத்தில் குறுந்தகட்டில் பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.