வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2015 (15:38 IST)

இலங்கை போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கையில் நடந்த போர்குற்றத்தை விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்றினார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று வெளியாகும் நிலையில் குற்றவாளிகள் தப்பிவிடாதபடி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என ஐ.நா சிறப்பு தூதர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தால் அதைமாற்ற இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட அம்சங்கள் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஒருமனதாக இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.