நாகை மீனவர்கள் 29 பேர் சிறைபிடிப்பு


Ashok| Last Updated: வியாழன், 31 டிசம்பர் 2015 (16:18 IST)
நாகப்பட்டினத்தில் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

 
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியிலிருந்து இன்று காலை 3 படகுகளுடன் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்ததாக சொல்லி,  29 மீனவர்களையும், 3 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட மீனவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு தினத்தையோட்டி இந்த சம்பவம் நாகப்பட்டினம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாளை புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :