1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2016 (15:36 IST)

நாம் தமிழர் பெண் வேட்பாளர் நீக்கம் - சீமான் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பெண் வேட்பாளர் தமிழ்செல்வியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென நீக்கியுள்ளார்.
 

 
தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்திருந்த சீமான், 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கடந்த மாதம் கடலூரில் அறிவித்து அவர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு பட்டதாரி பெண் மு.தமிழ்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆலங்குடியை அடுத்துள்ள கீரமங்கலத்தில் வேட்பாளர் தமிழ்செல்வி உள்பட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
 
அந்த நேரத்தில் ஆலங்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்செல்வி வேட்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆலோசனை கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.