வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : சனி, 17 அக்டோபர் 2015 (17:38 IST)

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு ஆதாரமாக  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 3 எழுத்தாளர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நரேந்திர மோடி அமைதி காப்பது நம் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து விடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


 


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், அப்பொழுது பேசுகையில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு ஆதாரமாக, 3 எழுத்தாளர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தற்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்துவருகிறார் என்று குற்றம்சாட்டினார், 

எழுத்தாளர்கள் கொல்லப்பட்டத்தற்கு விளைவாக,  இந்தியாவில் வசிக்கும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கிய சாகித்ய அகாடமி விருதினை திருப்பி அனுப்பியுள்ளனர். இந்திய நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து விடும் எனவும்  முத்தரசன் எச்சரிக்கை செய்துள்ளார்.