கனடாவில் தஞ்சம் புகுந்த இசையமைப்பாளர் அனிருத்


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 18 டிசம்பர் 2015 (23:06 IST)
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ’பீப்’ பாடல் விவகாரம் தமிழகத்தில் பற்றி எறிந்து வரும் நிலையில், தனது சென்னை பயணத்தை அனிருத் ரத்து செய்துள்ளார்.
 
 
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ’பீப்’ பாடல் சில நாட்களாக இணையதளங்களில் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடையேயும், பெண்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, புதுகை, கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இந்த நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன்பு கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த சென்ற இசையமைப்பாளர் அனிருத், இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவர் சென்னைக்கு நேற்றே திரும்புவதாக இருந்தது. இதற்காக, விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இந்த விவகாரம் காரணமாக, அனிருத் தனது சென்னை பயணத்தை ரத்து செய்து கனடாவிலேயே தங்கிவிட்டார். தனக்கு உரிய சட்ட பாதுகாப்பு கிடைத்த பின்பே சென்னைக்கு திரும்ப அனிருத் முடிவு செய்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :