திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (14:19 IST)

முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா.. இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து அறநிலை துறை சார்பில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளுக்கு 200 பக்தர்கள் வீதம் ஐந்து கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பக்தர்களை இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக  ஜனவரி 28ஆம் தேதி இந்த சுற்றுப்பயணம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் 60 முதல் 70 வயதுடைய பக்தர்களுக்கு  தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இந்த சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva