அடுக்குமாடி கட்டிடம் இடிந்த வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு


K.N.Vadivel| Last Updated: புதன், 13 ஜனவரி 2016 (05:57 IST)
மவுலிவாக்கத்தில் 11 மாடி, அடுக்குமாடி கட்டிடம் இடிந்த வழக்கில்,  சிபிஐ விசாரணை கோரி, மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு, காஞ்சீபுரம் மாவட்டம், மவுலிவாக்கத்தில் 11  மாடி, அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதபமாக பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தார்கள்.
 
இடிந்து விழுந்த கட்டிடம் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளது என்றும், இந்த முறைகேட்டில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கும், உயர் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு உள்ளதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதம் நடைபெற்றது. இதனையடுத்து, இந்த வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


இதில் மேலும் படிக்கவும் :