முடிவுக்கு வரும் பருவமழை: தமிழகத்தில் வெயில் கொளுத்துமா?

Sugapriya Prakash| Last Modified திங்கள், 18 ஜனவரி 2021 (14:03 IST)
வடகிழக்குப் பருவமழை நாளையுடன் நிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தகவல். 

 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை நாளையுடன் நிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :