திங்கள், 19 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அநேக இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இந்த பகுதிகளில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
நேற்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாகவே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran