நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified ஞாயிறு, 18 மே 2014 (19:13 IST)
பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை, தொலைபேசியில் தொடர்புகொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, ஸ்டாலினிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நரேந்திர மோடி விசாரித்தார்.
 
இது தொடர்பாக ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த தகவல் வருமாறு:-
 
"பிரதமர் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தேன். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து நரேந்திர மோடி விசாரித்தார்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :