10 ஆவது பட்ஜெட், “பத்தாத பட்ஜெட்”; வெளுத்து வாங்கும் ஸ்டாலின்

Arun Prasath| Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:59 IST)
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், “10 ஆவது பட்ஜெட், பத்தாத பட்ஜெட்” என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இன்று சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் ஆகும்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் “ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலில் 196 நிமிடங்கள் பேசினார். அவரை பொறுத்தவரை இது 10 ஆவது பட்ஜெட், ஆனால் இது  எத்ற்கும் பத்தாத பட்ஜெட்” என விமர்சித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :