வைகோவின் தாயார் மாரியம்மாள் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 6 நவம்பர் 2015 (22:12 IST)
மதிமுக பொதுச் செயளாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மரணத்திற்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
மதிமுக பொதுச் செயளாளர் அண்ணன் வைகோ அவர்களின் தாயாரும், தலைவர் கலைஞர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தவருமான திருமதி மாரியம்மாள் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமும் மன வேதனையும் அடைந்தேன். அண்ணன் வைகோவிற்கு அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்த தாயாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த தாயாரை இழந்து வாடும் அண்ணன் வைகோ அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :