இணைந்த இதயங்களே! மதுரையை கலக்கும் அழகிரி அண்ணன் - ஸ்டாலின் தம்பி போஸ்டர்கள்!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 7 மே 2021 (14:21 IST)
முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அழகிரிக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் மதுரை மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதற்கட்டமாக 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
 
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அழகிரிக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் மதுரை மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
அதில், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும், தலைமையேற்க வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி எனவும், இணைந்த இதயங்களே! முதல்வராக பதவியேற்கும் தமிழகத்தின் நல்லாட்சி நாயகர் தளபதியார் அவர்களுக்கு அஞ்சாநெஞ்சன் அவர்களின் வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முன்னதாக என் தம்பி முதலமைச்சராவதில் எனக்கு பெருமை என முக அழகிரி கூறியுள்ளார். மேலும், முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :