ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்: மீட்டுத்தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு


Ashok| Last Updated: செவ்வாய், 26 ஜனவரி 2016 (12:37 IST)
ஈரான்சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 11 பேரை மீட்டுத்தரக்கோரி அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனுகொடுத்தனர்.

 
 
துபாயில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், கீழக்கரைச் சேர்ந்த 11 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுத்தனர். அப்பொழுது, ஈரான் சிறையில் வாடும் தங்களின் குடும்பத்தினரை உடனடியாக மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். 
 
இதேபோல, துபாயில் கட்டிட வேலைக்கு சென்ற தனது கணவர் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டதாக உடன் வேலை பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், இன்று வரை தனது கணவரின் உடல் சொந்த ஊருக்கு வரவில்லை, கணவரின் உடலை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரமக்குடியைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவி ஜெயந்திமாலா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். இவருடைய மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உடலை பரமக்குடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :