1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Missed Opportunity: Would a TVK-Congress Alliance Have Wiped Out the DMK Entirely?

தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்திருந்தால் 30-40 எம்.எல்.ஏ கிடைச்சிருக்கும்.. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை செய்த வேலை..

தமிழக தேர்தல் 2026
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ள அசுரத்தனமான வாக்கு சதவீதம், திமுகவின் வெற்றி வாய்ப்புகளை பல இடங்களில் பறித்துள்ளது. இந்த சூழலில், "ஒருவேளை தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால், திமுக படுதோல்வியை சந்தித்திருக்கும், அதுமட்டுமின்றி காங்கிரஸ் 50 தொகுதிகளை பெற்றிருந்தால் அதில் 30-40 எம்.எல்.ஏக்கள் ஜெயித்திருப்பார்கள் என்ற விவாதம் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது.
 
குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் எடுத்த முடிவுகளே திமுகவை காப்பாற்றியுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது விஜய்யின் புதிய அலைக்கு ஆதரவு தருவதா என்ற ஊசலாட்டத்தில் இருந்தது. ஆனால், தவெக-வின் எழுச்சியை முன்கூட்டியே கணித்து அதனுடன் கைகோர்க்க காங்கிரஸ் தவறிவிட்டதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.
 
காங்கிரஸின் வாக்கு வங்கியும், விஜய்யின் 38 சதவீத வாக்குகளும் இணைந்திருந்தால், திமுக தமிழகம் முழுவதும் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை காங்கிரஸ் இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால், இன்று கோட்டையில் ஆட்சி மாற்றம் இன்னும் பிரம்மாண்டமாக நிகழ்ந்திருக்கும். 
 
ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகையின் முடிவு திமுகவிற்குச் சாதகமாக அமைந்தாலும், காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய வாய்ப்பைத் நழுவ விட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியா? ஜெயித்தால் அமைச்சர் ஆவாரா?