வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:03 IST)

டாஸ்மாக் வருமானம் ரூ 30000 கோடி – சட்டசபையில் திமுக & அதிமுக விவாதம்!

அமைச்சர் தங்கமணி

தமிழக பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் மக்கள் டாஸ்மாக் வருமானம் குறித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையிலான விவாதம் நடந்தது.

தமிழக அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மீதான விவாதக் கூட்டம் இன்று காலை சட்டசபையில் நடந்தது. அதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ’டாஸ்மாக் மூலமாக 30,000 கோடி ரூபாய் வருவாய் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என சொல்லிவிட்டு மதுவின் மூலம் வருவாயை அதிகரித்துக் கொண்டே போகிறது அதிமுக அரசு. டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளதா அரசு?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அதிமுக அமைச்சர் தங்கமணி ‘திமுக அரசுதான் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் எனத் தெரிவித்தது. அதிமுக அரசு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனக் கூறியது. அதேபோல ஜெயலலிதா உயிரோடு இருந்த போது டாஸ்மாக் இயங்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மதுவிலை உயர்வால்தான் வருமானம் உயர்கிரதே தவிர. மதுக்கடைகளை திறப்பதால் அல்ல. மக்கள் குடிக்கிறார்கள். அதனால்தான் மது விற்பனையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?’ என பதில் கேள்வி எழுப்பினார்.