1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister-rajmohan-supports-keerthana-govt-school-inspection-controversy

அக்கா ஸ்தானத்தில் நின்று பேசினார் – கீர்த்தனா விவகாரத்தில் ராஜ்மோகன் விளக்கம்

ராஜ்மோகன்
அரசுப் பள்ளியில் மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட விவகாரத்தில், தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா தொடர்பான சர்ச்சைக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்  பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் சார்பில் சிவகாசி தொகுதியில் வென்று, தற்போது தமிழகத் தொழில்துறை அமைச்சராக இருக்கும் எஸ். கீர்த்தனா, கடந்த ஜூலை 2-ஆம் தேதி தனது சொந்தத் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர், அங்கிருந்த ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில்  What's your father?  என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவி அமைதியாக இருக்கவே, அருகில் இருந்த ஆசிரியரிடம்  மாணவியால் ஒரு எளிய கேள்விக்குக்கூடப் பதிலளிக்க முடியவில்லையே என்று அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டார். பின்னர் ஆசிரியர் அந்த வினாவைத் தெளிவுபடுத்தியதும், மாணவி சரியாகப் பதிலளித்தார்.
 
இந்தக் குறிப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, எதிர்க்கட்சிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கண்டனங்களை எழுப்பியது. அரசுப் பள்ளி மாணவியை அமைச்சர் பொதுவெளியில் அவமானப்படுத்திவிட்டார்  என்று திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
 
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர் கூறியபோது,
 
அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்வது என்பது காலங்காலமாக நடக்கும் ஒரு சாதாரண மரபுதான். அதில் எந்தத் தவறும் இல்லை. அமைச்சர் கீர்த்தனா ஒரு மாற்றுத்திறனாளியின் மகளாகப் பிறந்து, கிராமப்புற பின்னணியில் முற்றிலும் தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர். கடுமையான உழைப்பால் இன்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய தனித்திறமையை வளர்த்துக்கொண்டு, இந்த இளம் வயதில் அரசியல் ஆளுமையாக உயர்ந்திருக்கிறார்.
 
அவர் அந்தப் பள்ளி மாணவியைப் பார்த்தபோது, தன் கடந்த கால எளிய வாழ்க்கையை நினைத்துப் பார்த்து, தன்னைப்போலவே ஒருத்தியாகத்தான் அவரை கருதினார். ஒரு அதிகாரியாகவோ, அமைச்சராகவோ அங்கு அவர் வலம் வரவில்லை. ஒரு அக்கா ஸ்தானத்தில் நின்று, அந்தத் தங்கைக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும்தான் பேசினார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை, யாரும் இதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று கூறினார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ட்ரோல் பண்றாங்க!.. இனிமே இதுதான்!. அமைச்சர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர்!..