தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர் ஜெயகுமார்: ஏன் தெரியுமா?

தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர் ஜெயகுமார்
Last Modified வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (19:44 IST)
தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர் ஜெயகுமார்
முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்பிமான தயாநிதி மாறன் மீது, அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த முறைகேடுகளில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். மேலும் சிபிஐ விசாரணை நடத்தினால் இதுகுறித்த உண்மைகள் வெளிவரும் கூறினார். இதுகுறித்த செய்தி கடந்த 31ம் தேதி நாளிதழ் ஒன்றில் வெளியானது.

இந்த நிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது திமுக எம்பி தயாநிதிமாறன் தவறான தகவல்களை கூறியுள்ளார் என்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அமைச்சரின் இந்த அவதூறு வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :